தமிழ் மென்பொருள் கண்காட்சி -29/09/2019

🔺 விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு (V-GLUG) மூலமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற “தமிழ் மென்பொருள் கண்காட்சி” பற்றி இப்பதிப்புரையில் கூற உள்ளேன்….

🔺அறிவியல் கண்காட்சியை போலவே உலகில் அனைவராலும் செப்டம்பர் மூன்றாம் வாரம் கொண்டாடப்படும் மென்பொருள் சுதந்திர தினம் இன்று( 29/09/2019) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பால் எம் ஆர் ஐ சி பள்ளியில் கொண்டாடப்பட்டது

🔺 தம் மண்ணின் மக்கள் அனைவரும் மென்பொருள் சுதந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் தங்கள் தனி உரிமைகளை பற்றி தெரிந்து கொள்ளவும், பல தனியார் நிறுவனங்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றுகின்றன என்பதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு இந்த தமிழ் மென்பொருள் கண்காட்சியை நடத்தியது

✴️ இக் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி ரவிக்குமார், தேசிய நல்லாசிரியர் திரு திலீப் ,காட்சி ஊடக தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் திரு செல்வமுரளி மற்றும்சாரதா வித்யாலயா பள்ளியின் தாளாளர் திரு ஆர் தயாளன் ஆகியோர் கலந்துகொண்டு இக்கண்காட்சியை சிறப்பித்தனர்

✴️ விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி ரவிக்குமார் இக்கண்காட்சியை துவக்கி வைத்தது மட்டுமல்லாது அங்கிருந்த அனைவருக்கும் தனிமனித தகவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அதுமட்டுமல்லாது விழுப்புரம் மாவட்டத்தை தகவல் தொழில்நுட்பத்தில் மேன்மையடைய செய்ய தேவையான உதவிகளை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பிற்கு உதவுவதாக உத்திரவாதம் அளித்தார் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியில் நடக்கும் குளறுபடிகளை அரசிற்கு தெரியப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்

✴️ இதன் தொடர்ச்சியாக தேசிய நல்லாசிரியர் திரு திலீப் அவர்கள் கல்வித்துறையில் ஆசிரியர்களாகிய தாங்கள் செய்துவரும் அளப்பரிய நிகழ்வுகள் குறித்து பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார்

✴️ இதன் பின் பேசிய திரு செல்வமுரளி அவர்கள் மத்திய அரசின் தொழில் முனைவோர் பயிற்சிகளில் ஏற்படும் முறைகேடுகள் குறித்தும் அம் முறைகேடுகளை தடுக்கவும் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஐயா திரு ரவிக்குமார் அவர்களிடம் அன்புடன் தனது கோரிக்கையை முன்வைத்தார்

✴️ இதன்பின் பொதுமக்கள் அனைவரும் தமிழ் மென்பொருள் கண்காட்சியை கண்டுகளித்தனர்

✔️ இதன் பின் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகத்துறை நண்பர் தோழர் சிந்தன் கிராமங்களின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஆற்றவேண்டிய தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் குறித்து தனது கோரிக்கையை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பிடம் முன்வைத்தார்

🌀 இக்கண்காட்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் சிறுவர்கள் சிறுமிகள் பொதுமக்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்🔥🔥🔥

🌀 இதன் தொடர்ச்சியாக தமிழ் மென்பொருள் கண்காட்சிக்காக அயராது உழைத்த நண்பர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது

🌀 இக் கண்காட்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பிலுள்ள தோழர் தோழியர்கள் திறம்பட செய்திருந்தனர்

🔻 2019 ஆம் ஆண்டிற்கான விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பின் பிரதிநிதியாக செல்வி விஜயலட்சுமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்🔥🔥

Published by RAMESHMARIAPPAN

ENGINEERING STUDENT...

6 thoughts on “தமிழ் மென்பொருள் கண்காட்சி -29/09/2019

Leave a reply to Khaleel Jageer Cancel reply

Design a site like this with WordPress.com
Get started